2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'அம்பாறையிலுள்ள அனைத்துக் தமிழ் கிராமங்களிலும் வளர்ச்சியை ஏற்படுத்துவேன்'

Thipaan   / 2015 செப்டெம்பர் 05 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ் கிராமங்களிலும் உன்னதமான வளர்ச்சியை ஏற்படுத்துவதுடன்  தமிழ் மக்களுக்கு  உண்மையான, நேர்மையான தலைமைத்துவத்தை வழங்குவேன் என அம்பாரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன் (ரொபின்) தெரிவித்தார்.

நேற்று மாலை (04) அக்கரைப்பற்றில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

நாடாளுமன்ற கன்னி அமர்வில் கலந்து கொண்டு அக்கரைப்பற்றுக்கு வருகை தந்த அவரை பெருந்திரளான மக்கள் ஒன்றுசேர்ந்து மத்திய சந்தைப்பகுதியில் வைத்து மாலை அணிவித்து  வரவேற்றனர்.

பின்னர் மேளதாள நாதஸ்வரங்களுடன் ஸ்ரீ மருதடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் வரை அழைத்துச் சென்றனர்.

அங்கு நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட அவர் மக்களுக்கு நன்றி தெரிவித்து  உரையாற்றினார்.

நன்றியுரையின்போது  'மக்கள் வழங்கிய ஆணைக்கிணங்க அவர்களின் நம்பிக்கைக்கு  பாத்திரமானவனாக செயற்படுவேன். என்றும் அவர்களுக்கு நன்றியுடையவனாக இருப்பேன்' எனஅவர் உறுதியளித்தார்.

இதற்காக பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதுடன்; தம்முடன் இணைந்து சேவையாற்ற முன்வரவேண்டும் எனவும் இங்கு கோரிக்கை விடுத்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X