Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
“அரசியல்வாதிகளை திருடர்கள், ஏமாற்றுக்காரர்கள், பொய்யர்கள் என்றெல்லாம் பார்க்கின்ற நிலைமை மாறவேண்டும்” என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.
காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபைக்கு நேற்று புதின்கிழமை (30) கதிரைகளை வழங்கி வைக்கும் வைபவத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“முஸ்லிம் சமூகத்தினுடைய சகல விடயங்களையும் தீர்மானித்து வழி நடாத்தக் கூடிய பொறுப்பும் சக்தியும் ஜம் இய்யத்துல் உலமா சபைக்கு உண்டு. அந்த வகையில், அரசியல்வாதிகளையும் உலமா சபை வழிநடாத்த வேண்டும்.
அரசியல்வாதிகள் என்றால் திருடர்கள் ஏமாற்றுக் காரர்கள் பொய்யர்கள் என்றெல்லாம் பார்க்கின்ற நிலைமை இருக்கின்றது. இந்த நிலைமை மாற வேண்டும்.
எமது பொறுப்பு மிக்க உலமா சபை எமது சமூகத்தை எல்லா விடயங்களிலும் தலையிட்டு சமூகத்தினை வழிநாடாத்த வேண்டும் என்ற தேவைப்பாடு இருக்கின்றது.
முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் மற்றும் நாங்கள் விடும் பிழைகளை அவ்வப்போது குத்பா மிம்பர்களில் பகிரங்கமாக சுட்டிக்காட்ட வேண்டும்.இதேவேளை, அரசியல்வாதிகளின் பொது விடயங்கள் தனிப்பட்ட விடயங்கள் என்பன குத்பா மிம்பர் மேடைகளில் சுட்டிக்காட்டப்பட வேண்டும். அவ்வாறு தவறுகள் பிழைகள் சுட்டிக்காட்டப்படுகின்ற போது அரசியல்வாதிகள் பண்படுத்தப்படுவார்கள்” என்றார்.
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago