Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா,எம்.எஸ்.எம்.ஹனீபா
ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதன் மூலமே ஒரு நாட்டின் உண்மையான அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் என அம்பாறை மாவட்ட உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.சனீர் தெரிவித்தார்.
தேசிய விவாசாயிகள் வாரத்தை முன்னிட்டு இன்று (10) அட்டாளைச்சேனை பிரதேச விவசாய விரிவாக்கல் நிலையத்தில் வீட்டுத் தோட்ட உரிமையாளர்கள் மற்றும் திவிநெகும உத்தியோகத்தர்களுக்கு இடம்பெற்ற விழிப்புணர்வுக் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'எமது தவறான உணவுப் பழக்கவழக்கங்களின் காரணமாவே அதிகளவிலான தொற்றா நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் உடல், உள ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன் பொருளாதார நிலையிலும் இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் விவசாயச் செய்கை முன்னேற்றம் கண்டு வருகின்ற அதேவேளை இரசாயனப் பொருட்களின் பாவனையும் அதிகரித்துச் செல்வது கவலைக்குரிய விடயமாகும். இதனால் மிகவும் பாராதூரமான நோய்களுக்கு ஆளாக்கப்பட்டும் வருகின்றோம்.
அண்மைக்கால தகவலின் அடிப்படையில் அக்கரைப்பற்று மற்றும் தெஹியத்தகண்டி ஆகிய பிரதேசங்களில் சிறு நீரக நோய் தொடர்பான அறிகுறிகள் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் உப உணவுப் பயிர்ச்செய்கையில் ஆர்வம் செலுத்தி அதன் உற்பத்தியை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். இன்று எமது நாட்டின் நுகர்வுக்கான அதிகளவிலான உப உணவுப் பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றது.
எமது நாட்டில் அனைத்து வளங்களும், அதற்கான சந்தர்ப்பங்களும் காணப்படுகின்ற நிலையில் அதிகளவிலான பணம் வெளிநாடுகளுக்குச் செல்கின்ற நிலைமையை தடுத்துக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக தவறான உணவுப் பழக்கவழக்கம் மற்றும் இரசாயனப் பொருள் பாவனையிலிருந்து நாம் விடுபடுவதன் மூலம் சுகாதாரத்துறைக்காக அரசாங்கம் செய்யும் செலவீட்டிலிருந்து பெரும் தொகையினைக் குறைக்க முடியும்' என்றார்.
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago