Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2016 நவம்பர் 13 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
சமூகம் சார்ந்த நலனில்; அக்கறை இல்லாத கிழக்கு மாகாண முதலமைச்சருடன் ஆளும் கட்சியில் இணைந்துகொண்டு செயற்படுவதை விட, எதிர்க்கட்சியில் அமர்ந்துகொண்டு செயற்படுவது மேலானது என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபையில் ஆளும் தரப்பிலிருந்து எதிர்த்தரப்புக்குச் சென்ற விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (13)கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,'வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணையவேண்டும் என்று வட மாகாணசபையில் பிரேரணை நிறைவேற்றும் வேளையில், கிழக்கு மாகாணசபையில் கிழக்கு மாகாணம் தனித்திருக்க வேண்டும் என்று பிரேரணையை நிறைவேற்றுவதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட ஆளும் கட்சி முஸ்லிம் உறுப்பினர்கள் திராணியற்றவர்களாக உள்ளனர்.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது சமூகம் சார்ந்த விடயங்களில் தைரிமாக செயற்பட்டு, வட மாகாணசபையை சிறந்த முறையில் வழிநடத்துகின்றார். ஆனால், கிழக்கு மாகாண முதலமைச்சர் தனக்கான அதிகாரத்தை வைத்துக்கொண்டு தைரியம் அற்றவராக இருந்துவருவது சமூகத்துக்குச் செய்யும் பாரிய துரோகமாக அமையும்.
இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவது மனச்சாட்சிக்கு இடமளிக்காததன் காரணமாக ஆளும் கட்சி வரிசையிலிருந்து எதிர்க்கட்சி ஆசனத்துக்குச்; சென்று அமர்ந்தேன்.
கிழக்கு மாகாணங்கள் தனித்தே இருக்க வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளேன். அண்மைக்காலமாக வட, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் பேச்சுக்களும் பரவலாக இடம்பெற்று வருகிறன. இந்த விடயத்தில் தமிழ் அரசியல் தலைமைகளும் மிகத்தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறனர். அது அவர்களுடைய இலட்சியமும், நிலைப்பாடுமாகும்.
ஆனால் முஸ்லிம் அரசியல் தலைமைகளில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மட்டுமே கிழக்கு பிரிந்திருக்க வேண்டும் என மிகத்தெளிவாகக் கூறிவந்தார். ஆனால் ஏனைய தலைவர்கள் இந்தவிடயத்தில் மெத்தனப்போக்குடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக கிழக்கு மாகாண சபையில் இருக்கின்ற முதலமைச்சரும் ஆளுங்கட்சி முஸ்லிம் உறுப்பினர்களும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனித்தே இருக்க வேண்டுமென்ற ஒரு தீர்மாணத்தை கிழக்கு மாகாண சபையிலே நிறைவேற்றுவதற்கு திராணியற்றவர்களாக உள்ளனர்.
தற்போது அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் விசேடமாக ஜனாதிபதி முறை, தேர்தல் முறை, வடக்கு, கிழக்கு இணைப்பு, சமஷ்டி போன்றன தொடர்பாகவும் ஆராயப்பட்டு வருகின்றன.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து முஸ்லிம் சமூகத்தை ஒருபோதும் அடிமைச் சமூகமாக மாற்றுவதற்கு அனுமதிக்க முடியாது. இந்த வரலாற்றுத் தவறுக்கு ஒரு போதும் துணைபோகவும் முடியாது.
குறிப்பாக கிழக்கு மாகாணத்திலே தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளோம் என்பதற்காக வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்தில் ஒருபோதும் மௌனம் காக்கமுடியாது. ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் இந்தவிடயம் தொடர்பில் பேசுவதற்கு அச்சப்படுகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
8 hours ago