2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

இ.போ.ச. கிழக்குப் பிராந்தியக் காரியாலயத்தில் சாரதிப் பயிற்சிப் பாடசாலை

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை, கல்முனைப் பிரதேசத்திலுள்ள இலங்கை போக்குவரத்துச் சபையின் கிழக்குப் பிராந்திய தலைமைக் காரியாலயத்தில் சாரதிப் பயிற்சிப் பாடசாலை நாளை வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது.

18 வயதைப் பூர்த்திசெய்த இருபாலாரும்  சாரதிப் பயிற்சியை இங்கு பெறமுடியும். சாரதி அனுமதிப்பத்திரத்துடன் இலகுரக வாகனங்களுக்கான சாரதிப் பயிற்சிக்கு 9,500 ரூபாயும் கனரக வாகனங்களுக்கான சாரதிப் பயற்சிக்கு 12,000 ரூபாயும் அறவிடப்படும்.

மேலும், அரசாங்க அலுவலங்களில் கடமையாற்றுவோருக்கு கட்டணக் கழிவு வழங்கப்படும். இப்பயிற்சியின் பின்னர் சர்வதேச தரத்துடன் கூடிய சான்றிதழ் வழங்கப்படுமென இ.போ.சபையின்  கிழக்குப் பிராந்திய பிரதான முகாமையாளர் ஏ.எல்.சித்தீக் தெரிவித்தார்.

கனரக வாகனங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை பெற்றவர்கள் இரண்டு வருட காலத்துக்குப் பின்னர் இ.போ.சபையின் சாரதித் தொழிலுக்கு  விண்ணப்பிக்க முடியுமெனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X