Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Niroshini / 2016 பெப்ரவரி 06 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
அம்பாறை, கல்முனையில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை இடமாற்றம் செய்ய எடுத்துள்ள சகல நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி குறித்த பணியகம் தொடர்ந்தும் அதே இடத்தில் இயங்குவதற்கான சகல முன்னெடுப்புக்களையும் முன்னெடுத்துள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் பைசால் காசிம் இன்று (06) தெரிவித்தார்.
இது தொடர்பாக பிரதி சுகாதார அமைச்சர் பைசால் காசிம் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கல்முனையில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை இடமாற்றுவது தொடர்பான தகவலை அறிந்ததையடுத்து, அதை தடுத்து நிறுத்துவதற்காக வேண்டி அது தொடர்பான உரிய உயரதிகாரிகளுடன் தொடர்புகொண்டு குறிப்பிட்ட மாவட்டத்திலுள்ள மக்களின் பிரச்சினை பற்றியும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முக்கியத்துவம் பற்றியும் கூறியதாகவும் கூறினார்.
இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகொரலவிடமும் அம்பாறை மாவட்ட மக்களினதும் இம்மாவட்டத்தை அண்டிய பகுதி மக்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முக்கியத்துவம் பற்றியும் மிகத் தெளிவாக எடுத்துரைத்ததையடுத்து குறித்த பணியகம் உரிய இடத்திலே தொடர்ந்தும் இயங்க அமைச்சர் தலதா அதுகொரல இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், எதிர்வரும் 9ஆம் திகதி நாடாளுமன்ற அமைச்சர்கள் காரியாலயத்தில் இவ்விடயம் தொடர்பாக கலந்தாலோசித்து 'மாவட்டத்துக்கு ஒரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்' எனும் திட்டத்துக்கு அமைய இந்த இடத்தை தெரிவு செய்வது தொடர்பாகவும் இவ்வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை அபிவிருத்தி செய்யவும் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கையினை எடுக்கவுள்ளதாகவும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
11 minute ago
19 minute ago
25 minute ago