2025 ஜூலை 05, சனிக்கிழமை

'இணையத்தள பாவனையால் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம்'

Niroshini   / 2015 நவம்பர் 04 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

உலகில் அதிகரித்து காணப்படும் இணையத்தள பாவனையால் இளைஞர் சமூதாயத்தின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் தோன்றியுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தெரிவித்தார்.

சர்வதேச இணைய தினத்தையொட்டி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீடத்தின் கணனி கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் எம்.சி.எம். மன்சூர் தலைமையில் ஒலுவில் வளாகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வேலைகளை விரைவாகவும் நேர்த்தியாகவும் செய்து முடிப்பதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப வசதியை இக்கால கட்டத்தில் இளைஞர் சமூதாயம் அதனை தவறான வழியில் பயன்படுத்துவதோடு அவர்களின் நேரம், காலம் என்பன வீணடிக்கப்படுகின்றன. இதனால் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வீழ்ச்சிக்கு வழி கோலும்.

தற்காலத்தில் இணையத்தள வசதி ஒரு மனிதனுடைய வாழ்க்கைக்கு இன்றியமைதாக காணப்படுகின்றது. இதனை சிலர் தவறாக பயன்படுத்தி வருவது கவலையளிக்கின்றது.

இன்று தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் சமூகம் பிண்ணிப் பிணைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவு இல்லாத எந்த மனிதனுக்கு உலகில் இருக்கவே முடியாது என்றார்.

இந் நிகழ்வில் ஓய்வு நிலை பேராசிரியர் உமா  குமாரசுவாமி, பீடாதிபதி எம். அப்துல் ஜப்பார் மற்றும் பீடாதிபதிகளும், விரிவுரையாளர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது,பேராசிரியர் உமா குமாரசுவாமி, உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீமினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .