Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஜூலை 14 , மு.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
பொது பலசேனா அமைப்பு மற்றும் இனவாதச் சிந்தனை கொண்ட அமைப்புகளுக்கு எதிராக நல்லாட்சி அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்துள்ளார்
இது தொடர்பில் இன்று வியாழக்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'எமது நாட்டில் அண்;மைக்காலமாக பொது பலசேனா அமைப்பும் சில இனவாதச் சிந்தனை கொண்ட அமைப்புக்களும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக மேற்கொண்டுவரும் இனவாத பேச்சுக்களையும் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்தி, இனவாத செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் உடன் மேற்கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களின் மனதை தொடர்ந்தும் புண்படுத்தி, ஆத்திரமூட்டும் செயற்பாடுகளை உடன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்;திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை கோரும் தனிநபர் பிரேரணையை கிழக்கு மாகாண சபையின் எதிர்வரும் அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளேன்.
எமது நாட்டில் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளும் இஸ்லாம் மார்க்கத்தினை நிந்தனை செய்து அவமதிக்கும் செயற்பாடுகளும் பொது பல சேனா அமைப்பினாலும் சில இனவாத அமைப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பல்லின சமூகங்கள் வாழ்ந்து வரும் நமது நாட்டில் இன ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான முன்னெடுப்புக்களை சமயத்தலைவர்களும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். எனவே இன நல்லுறவு, பாதுகாப்பு, சம அந்தஸ்து தொடர்பிலான கருத்துக்களுக்கு ஆதரவு வழங்கி ஆட்சிக்கு அமர்த்திய சிறுபான்மை சமூகத்தினரின் நம்பி;க்கை வீண் போகா வண்ணம் இந்த நல்லாட்சி அரசாங்கம் மேலும் தாமதிக்கமல் உடன் செயற்பாட்டில் இறங்க வேண்டும்'; என்றார்.
44 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
1 hours ago