Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கமையவும் தேர்தல் காலத்தில் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்த கருத்துக்கமையவும் 2016ஆம் ஆண்டில் தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய வகையில் நல்லதொரு தீர்வை கூட்டமைப்பு நிச்சயம் பெற்றுத்தருமென கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் கவிந்திரன் கோடிஸ்வரன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரை வரவேற்கும் நிகழ்வு, விநாயகபுரம் மின்னொலி விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை (08) இரவு நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்வு தேடிய பயணத்தில் ஐக்கிய இலங்கைக்குள் ஒரு சமஷ்டியை அல்லது சுயாட்சியை பெற்றுக்கொள்ள நாம் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடுவோம். இதன் மூலம் எமது உரிமையை பெற்று தமிழையும் தமிழ்த்; தேசியத்தை பாதுகாப்பதுடன், முப்பது வருடங்களுக்கும் மேலாக அழிந்துபோன எமது பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பமுடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐந்து வருடகாலத்தினுள் இதைச் செய்துமுடிக்கும்' என்றார்.
'மேலும், உள்ளகப் பொறிமுறைகளை விடுத்து நியாயமான சர்வதேச விசாரணைக்கான தேவை கோரி போராடுவோம். காரணம் உள்ளகப் பொறிமுறைகள் சரியான தீர்வை பெற்றுத்தராது. சர்வதே விசாரணை மூலம் எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பதுடன், குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனையும் கிடைக்கவேண்டும். இந்த இரண்டு விடயங்களும்; ஒரே நேரத்தில் இடம்பெற வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.
5 minute ago
34 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
34 minute ago
51 minute ago
1 hours ago