Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 செப்டெம்பர் 20 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
இலங்கையில் பல அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் பல காணப்பட்ட போதிலும் இலங்கை இஸ்லாமிக் ரிலீப் தன்னார்வ தொண்டு நிறுவனமானது சமூக, பொருளாதார, கல்வி மற்றும் கலாசார நிலைமைகளை மையமாகக் கொண்டு அதன் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதானது பாராட்டத்தக்க விடயமாகும் என அட்டாளைச்சேனை பிரதேச செயலாளார் ஐ.எம்.ஹனீபா தெரிவித்தார்.
எதிர்வரும் ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வறிய குடும்பங்களுக்கு 'ஈத் கிப்ற் புரஜெக்ட்' புத்தாடைகள் வழங்கி வைக்கும் திட்டத்தின் ஒரு கட்டமாக அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான புத்தாடை விநியோகம் இன்று ஞாயிற்றுக்கிழமை லொயிட்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
கடந்த சுனாமி அனர்த்த காலங்களின் போது மிகவும் நேர்த்தியாகவும் செம்மையாகவும் மக்களுக்கான நிவாரணங்களையும, சேவைகளையும் வழங்கிய அரச சார்பற்ற நிறுவனமாக இஸ்லிமிக் ரிலீப் காணப்படுகின்றது.
இந்நிறுவனமானது கல்விச் சேவையிலும் அளப்பரிய பங்களிப்பை முன்னெடுத்து வருகின்றது. அம்பாறை மாவட்டத்தில் வறிய குடும்பங்கள் மற்றும் அனாதைகள், பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் என தெரிவு செய்து அந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில், பாடசாலை உபகரணங்கள் என சேவையாற்றி வருகின்றமை பாராட்டுக்குரியது.
எல்லாவற்றுக்கும் மேலாக இன நல்லுறவை மேம்படுத்தும் வகையில் அம்பாறை மாவட்டத்தில் மூவினங்களுக்குமாக மனிதபிமான சேவைகளை மேற்கொண்டு வருகின்றமை நல்லதொரு சூழ்நிலையை தோற்றுவிக்கும் என்றார்.
இந்த நிகழ்வில், இலங்கை இஸ்லாமிக் ரிலீப் வதிவிடப் பிரதிநிதி இப்றாஹீம் சப்ரி, வெளிக்கள மேற்பார்வையாளர் என்.எம். இப்றாஹீம், சமூக சேவை அதிகாரி எம்.ஐ.எம். அன்வர், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.இர்பான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
30 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago
1 hours ago