2025 மே 22, வியாழக்கிழமை

'உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்'

Niroshini   / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-பி.எம்.எம்.ஏ.காதர்

சலுகைகளை மறந்து உரிமைகளை நிலைநாட்ட ஒருமித்து குரல் கொடுக்க வேண்டிய காலம் இப்போது வந்திருக்கின்றது. கருத்து வேறுபாடுகளால் பிரிந்து நிற்காமல் எல்லோரும் ஒன்றாக நின்று குரல் கொடுக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர்பீட உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிரேஸ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார்.
 
சாய்ந்தமருது மருதம் கலைக்கூடலின் 2ஆவது ஆண்டு நிறைவு விழாவும்  நினைவுக் கவியரங்கும் ஞாயிற்றுக்கிழமை மாலை(31) சாய்ந்தமருது  இளைஞர் சேவை மன்றக் கட்டத்தில் கலைக்கூடலின் தலைவரும்,முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் சேவைகள் அமைச்சின் இணைப்பாளருமான அஸ்வான் சக்காப் மௌலானா தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

அபிவிருத்திகளை நம்பி எமது உரிமைகளை  விட்டுக் கொடுக்க முடியாது உரிமைகளைப் பெறவேண்டுமானால் நாங்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

இன்று நினைவு கூறப்படுகின்ற செனட்டர் மசூர்மௌலானா  தமிழ்பேசும் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்துப் போராடி சிறைவாசம் அனுபவித்தவர் மக்களுக்காக தன்னால் இயன்றவரை சேவையாற்றியவர். இறுதிவரை அவர் உரிமைக்காகக் குரல் கொடுத்தவர். எப்போதும் மக்களின் உரிமை பற்றியே பேசுவார்.

அதேபோன்று,  மசூர்மௌலானாவின் சகோதரர் சக்காப் இஸட் மௌலானா, கலை இலக்கியத்தின் மூலமாக தமிழ், முஸ்லிம் நல்லுறவையும் சமூக மேம்பாட்டையும் கட்டியெழுப்பியவர். அதேபோன்று, மக்களின் தீய பண்புகளை மாற்றி நல்ல பண்புகளை  உருவாக்க கலை இலக்கியத்தின் ஊடாகப் பங்காற்றியவர். அவர் நாடகங்கள் ஊடாக சமூகத்துக்கு நல்ல செய்திகளைச் சொல்லி சமூகத்தில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்தவர்.

அவரிடம் எல்லோரையும் அரவணைத்துச் செல்லக் கூடிய நல்ல பண்பு இருந்தது. ஆங்கில ஆசிரியரான  அவர் ஆங்கிலக் கல்வியை மாணவர்களுக்குப் புகட்டுவதில் அதிக ஆர்வம் காட்டினார் என்றார்.

இந்த நிகழ்வில், விஷேட அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்,கௌரவ அதிதியாக எம்.எஸ்.அப்துல் றஸாக், கல்முனை பொலிஸ் நிலைய உதவிப் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன்,ஒய்வு பெற்ற கல்வி அதிகாரிகளான எம்.பி.எச்.மொஹமட்,ஏ.பீர்மொஹமட்,நிருவாக உத்தியோகத்தர் ஏ.உதுமாலெப்பை, இளைஞர் சேவை அதிகாரி எஸ்.எம்.ஏ.லத்தீப், கலாசார உத்தியோகத்தர் ஏ.எச்.அஹமட் அம்ஜத் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X