2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'உலமா கட்சி நல்லாட்சி அரசுக்கு எதிரானதல்ல'

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

உலமா கட்சி நல்லாட்சி அரசுக்கு எதிரானதல்ல. ஆனால் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக நல்லாட்சிக்கு வாக்களித்தும் இன்றுவரை முஸ்லிம்களின் எந்த உரிமையும் கிடைக்கவில்லை என்பதால் நாம் கண்மூடித்தனமாக நல்லாட்சியை ஆதரிக்க முடியாது என்று உலமா கட்சித் தலைவர் முபாறக் மௌலவி நேற்று (06) தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 'முஸ்லிம்களை பொறுத்தவரை அனைவரும் ஒரே பக்கம் நிற்க முடியாது. அப்படி நின்றால் நமது சமூகம் எடுப்பார் கைப்பிள்ளையாகத்தான் இருக்கும்.

வடக்கையும், கிழக்கையும் எக்காரணம் கொண்டும் இணைக்கக் கூடாது என்றும் அதற்கு ஒருபோதும் ஆதரவு வழங்கக் கூடாது என்ற கோரிக்கையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று (05) பத்தரமுல்லையில் உள்ள அவரது கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது இதனை தெரிவித்திருந்தேன்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X