Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
அம்பாறை மத்திய முகாம் வயல் பிரதேசத்தில் மேச்சலுக்கு சென்ற 15 எருமை மாடுகளை திருடிச் சென்ற 17 வயதுடைய சிறுவன் உட்பட 6 பேரை உடன் கைது செய்யுமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜூட்சன் சவளக்கடை பொலிஸாருக்கு பிடிவிறாந்து பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
மத்தியமுகாம் 7ஆம் கொலனி வயல் பிரதேசத்தில் மேச்சலுக்கு கடந்த 01ஆம் திகதி சென்ற 11 இலச்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 15 எருமை மாடுகள் காணாமல் போயுள்ளன.
இது தொடர்பில் மாடுகளின் உரிமையாளர் சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் சம்மாந்துறை அக்கரைப்பற்று ஊடாக பொத்துவில் பிரதேசத்துக்கு எருமை மாடுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றதையடுத்து சவளக்கடை பொலிஸார் அப்பகுதிக்கு நேற்று புதன்கிழமை (09) சென்று சோதனையிட்டபோது திருடர்களால் கைவிடப்படட் நிலையில் இருந்த 6 எருமை மாடுகளை மீட்டனர்.
இச் கொள்ளைச் சம்பவத்தின் சூத்திரகாரிகளான பொத்துவில் ,திருக்கோவில், அக்கரைப்பற்று பிரதேசங்களைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவர் உட்பட 7 பேர் கொண்ட குழுவினர் தலைமறைவாகியுள்ளனர்.
இவர்களை உடன் கைது செய்யும்முகமாகவே கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.ஜூட்சன் பிடிவிறாந்து பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை மீட்கப்பட்ட 6 எருமை மாடுகளையும் இன்று வியாழக்கிழமை உரிமையாளரிடம் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.
5 minute ago
34 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
34 minute ago
51 minute ago
1 hours ago