Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
இந்நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் ஒப்பீட்டு ரீதியில் கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்னடைவான நிலையில் காணப்படுகின்றார்கள் என தேசிய ஷூறா சபை செயற்குழு உறுப்பினரும் ஜாமியா நளீமிய்யா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான எஸ்.எச்.எம்.பழீல் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட இளம் ஆய்வாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ஆய்வாளர் சிராஜ் மஸ்ஹூர் தலைமையில் இன்று (09) ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரவிக்கையில், 'இலங்கையில் சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கு அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் பங்களிப்பு இன்றியமையாத ஒன்றாகக் காணப்படுகின்றது. இன்று முஸ்லிம் இளைஞர்களது பருவக் கோளாறு முஸ்லிம் சமூகத்திற்கு மிகப்பெரிய சவாலாக மாறிவருகின்றது.
ஒப்பீட்டளவில் முஸ்லிம்கள் ஒரு நாளைக்கு 400 குடும்பங்கள் விவாகரத்துப் பெற்றுக்கொள்கின்றன. வீட்டு வன்முறைகள் 80 வீதமாகக் முஸ்லிம்களிடத்தில் அதிகரித்துக் காணப்படுகின்றது.
இலங்கையில் 6.7 வீதம் வறுமை காணப்பட்ட போதும் முஸ்லிம்களிடத்தில் 22 வீதமானவர்கள் வறுமையினால் பீடிக்கப்பட்டுள்ளதோடு 18.7 வீதம் குற்றச்செயல்களும் அதிகரித்துக் காணப்படுகின்றன.
இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் 25 வீதமானவர்கள் தொற்றாநோயினால் ஒப்பீட்டளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முஸ்லிம் சமூகத்திற்கெதிராக குற்றச்சாட்டுகள், நூல்கள் மற்றும் இணையத்தளங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
எதற்கு முன்னுரிமை கொடுப்பது எனத்தெரியாமல் முஸ்லிம் சமூகம் தடுமாறுகின்றது. பல்கலைக்கழகக் கல்வி தொழில்நுட்பக் கல்வி என்பன வீழ்ச்சியடைந்து காணப்படுகின்றன.
இலங்கையில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்கள் அதிகமான சலுகைகளுடன் வாழ்ந்து வருகின்றார்கள.; எனவே நாட்டின தேசிய பிரச்சினையான இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் எதிர்காலத்தில் உந்து சக்தியாகத் திகழ வேண்டும்' என்றார்.
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago