Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூலை 19 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்
யுத்தம் முடிவடைந்து, தமிழ் மக்கள் அனைத்தையும் இழந்தவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு இருக்கின்ற ஒரேயொரு சொத்து கல்வி ஆகும். கல்வியின் மூலம் சாதிக்கமுடியாத காரியம் எதுவும் இல்லை என்பதை அறிந்து நாம் ஒவ்வொருவரும் செயற்படவேண்டும்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்
அம்பாறை, ராணமடு இந்து மகா வித்தியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'பல நாடுகளை எடுத்துக்கொண்டால் யுத்தத்தின் பின் பல தரப்பட்ட இழப்புக்கள் நடந்த பின் அவர்கள்; தங்களது கையிலே எடுத்த ஆயுதம் கல்வி எனும் ஆயுதமே. இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தித்தான் அவர்கள் இன்று சர்வதேச ரீதியில் முதன்மை வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். பல தரப்பட்ட ஆற்றல்கள் மிக்கவர்களாகக் காணப்படுகின்றனர். இதுபோல் நாமும் கல்வியிலே முன்னேற வேண்டும். அதற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு வசதி வாய்ப்புக்களை நாம் செய்து கொடுக்கவேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
47 minute ago
50 minute ago
52 minute ago