2025 மே 03, சனிக்கிழமை

'ஒற்றையாட்சி நடைபெறுமானால் இனங்களுக்கு இடையில் விரிசல் ஏற்படும்'

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 28 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

இந்த நாட்டில் ஒற்றையாட்சி தொடர்ந்து நடைபெறுமானால் இந்த நாடு பிளவுபடுவதுடன், இனங்களுக்கு இடையில் விரிசல் ஏற்படும். ஆகையால், நாட்டில் சமாதானத்துடனும்  புரிந்துணர்வுடனும் வாழ்வதற்கு சமஷ்டி முறையிலான அதிகாரம் பகிரப்பட வேண்டும் எனத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராஜா தெரிவித்தார்.

சமஷ்டித் தத்துவத்தின் அடிப்படையில் தமிழர்களுக்கு உரிய அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும்.  அத்தீர்வின் மூலம் தமிழர்களின் அழிந்துபோன பகுதிகள் மீளக்கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் கூறினார்.

அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், ஆலையடிவேம்புப் பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'தற்போது ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கம் தமிழ் மக்களையும் ஐ.நா.  தீர்மானத்தையும் ஏமாற்றினால்,  தென்னிலங்கையில் ஆட்சியை நடத்தாது தடுக்கும் போராட்டத்தை த.தே.கூ நடத்துவதற்குத் தமிழ் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுடன்,  நீங்கள் ஒத்துழைப்பு  வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையும் உண்டு.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை எதிர்பார்த்தவர்களாக இருக்கின்றோம்' என்றார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X