Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 மார்ச் 14 , மு.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா,பைஷல் இஸ்மாயில்
அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட ஒலுவில் மீன்பிடித் துறைமுக நுழைவாயில் கடந்த சில மாதங்களாக கடல் மண்ணால் மூடப்பட்டுள்ளதாகவும் அம்மண்ணை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கக் கோரியும் அங்கு இன்று (14) மீனவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியில்; ஈடுபட்டனர்.
துறைமுக நுழைவாயிலிலிருந்து ஆரம்பமாகிய பேரணி, ஒலுவில் பிரதான வீதிவரை சென்றதுடன், அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜிடம் இது தொடர்பான மகஜரை மீனவர்கள் கையளித்தனர்.
கல்முனை கரையோர மாவட்ட மீனவக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம், அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திரப்படகு உரிமையாளர்கள் சங்கம், கல்முனை மாவட்டக் கடற்றொழில் அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி; முன்னெடுக்கப்பட்டது.
இது தொடர்பில் கல்முனை கரையோர மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் எம்.ஜீ.எம்.பௌகுர்தீன் தெரிவித்தபோது, 'காற்றினால் மணல் அள்ளுண்டு மேற்படி துறைமுக நுழைவாயிலை மூடியுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
இது தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது, மணலை அகற்றுவதற்காக துறைமுகத்துக்கு கப்பல் அனுப்பப்பட்டு, மணல் அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன் பின்னர் போதிய நிதி வசதி இல்லாமை உட்பட சில காரணங்களால் இ;ம்மணலை அகற்றும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், மேற்படி கப்பலும் அங்கிருந்து வெளியேறியுள்ளது' என்றார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago