2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'கிழக்கின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக அ.இ.ம.கா. திகழும்'

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

அடுத்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கிழக்கின் ஆட்சியைத் தீர்மானிக்கும்  சக்தியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திகழும் என அக்கட்சியின் பிரதித் தலைவரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

கல்முனையில் நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட்; பதியுதீன், பிரதி அமைச்சர் அமீர் அலி உட்பட மற்றும் பல முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'இன்று கிழக்கின் இருப்பு கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. வடக்கு, கிழக்கு இணைப்புக்கு திரைமறைவில் பாரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிழக்கு மக்களை அடிமைப்படுத்துகின்ற அந்த இணைப்புக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒருபோதும் இடமளிக்க மாட்டாது.

இது விடயத்தில் எமது கட்சித் தலைவர் ரிஷாத் பதியுதீன் மிகத் தெளிவாக, உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடமும் இந்த நிலைப்பாட்டை வலியுறுத்தவுள்ளார். இது விடயத்தில் நாம் எந்த சக்திக்கும் அஞ்சவும் மாட்டோம் சோரம் போகவும் மாட்டோம்.' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X