Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Gavitha / 2017 பெப்ரவரி 11 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ்
'கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கலைத்துறை தவிர்ந்த சகல பீடங்களின் ஆதிக்கமும் பெரும்பான்மை இன மாணவர்களின் கைகளுக்குச் சென்றுள்ளது. கலைத் துறை, ஆங்கிலத்தில் ஆரம்பிக்கப்படுமாயின், பல்கலைக்கழகம் சிங்கள மயமாகிவிடும்' என்று, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிழன் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திலிருந்து மருத்துவம், பொறியியல், சட்டம் ஆகிய துறைகளுகளில் தெரிவு செய்யப்பட்ட 19 மாணவர்களுக்கு, புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு, நேற்று (10) இடம்பெற்றது.
இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
'கிழக்குப் பல்கலைக் கழகமானது, தமிழ் பேசும் சமூகத்துக்கென்று கொண்டுவரப்பட்ட ஒன்றாகும். ஆனால், தற்போது கலை, கலாசார பீடம் தவிர்ந்த ஏனைய சகல பீடங்களிலும், சிங்களவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. கலைப் பிரிவு தமிழ் மொழியில் உள்ளதால், நாங்கள் 100 சதவீதமான உள்ளோம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த அரசாங்கம், கிழக்கு பல்கலைக் கழகத்தில் சிங்கள மாணவர்களை திட்டமிட்டு அனுமதித்தது. பெரும்பானமை இன மாணவர்களால் கலாசார சீர்கேடுகள் நடைபெறுகின்றன. இதனால் எமது பிள்ளைகள் பல சிரமங்களை எதிர்நோக்குகிறார்கள்.
எமது மாணவர்கள் பல்கலைக் கழகத்துக்கு விண்ணப்பிக்கும் போது, கிழக்குப் பல்கலைக்கழகத்தை முன்னிலைப் படுத்தாது ஏனைய பல்கலைக் கழகங்களை முன்னிலைப்படுத்துவதால், பல்லைக்கழக அனுமதி வேறு பிரதேங்களில் கிடைக்கிறது. சிங்கள மாணவர்கள் கிழக்குப் பல்கலைக் கழகத்தைத் தெரிவு செய்கிறார்கள். அதனால் அவர்களை இங்கு அனுப்புகிறோம் என்று உயர்கல்வி அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது எம்மிடம் தெரிவிக்கப்பட்டது.
எமது மாணவர்கள் கிழக்கு பல்கலைக் கழகத்துக்கு விண்ணப்பிப்பதில் என்ன பிரச்சினை உள்ளது. இங்கு மாணவர்களுக்கான சகல வசதிகளும் எற்படுத்தபட்டுள்ளது. எதிர்காலத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் கிழக்குப் பல்கலைக் கழகத்தை முன்னுரிமைப்படுத்த வேண்டும். அதன் மூலம் எமது பலகலைக் கழகத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும்.
தற்போது கலைப் பிரிவையும் ஆங்கிலத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்படுகிறது. அதனைத் தடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்த விடயத்தில் எமது மாணவர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.
எமது நாட்டிலிந்து புலம்பெயர்ந்து மேலத்தேய நாடுகளில் வாழும் வட பகுதி மக்களே கிழக்கு மாகாண மக்களுக்கு உதவிபுரிகிறார்கள். கிழக்கு மாகாண மக்கள் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் அவர்களிடம் இருந்து கிடைக்கும் உதவி குறைவாகவே உள்ளது' என்று இதன்போது அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago