2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண அபிவிருத்தி அரங்கம் கூட்டத்தொடரை அமுல்படுத்துமாறு பிரேரணை

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எஸ்.எம்.ஹனீபா

'கிழக்கு மாகாண அபிவிருத்தி அரங்கம்' என்ற கூட்டத்தொடரை மீண்டும் அமுல்படுத்துமாறு கிழக்கு மாகாணசபையைக் கோரும் தனிநபர் பிரேரணையை எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ள சபை அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளதாக மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'கிழக்கு மாகாணசபையின் சகல தரப்பினரின்; பங்குபற்றுதலுடன் கடந்த மாகாணசபை ஆட்சிக்காலத்தில் மாவட்டங்கள் தோறும் 'கிழக்கு மாகாண அபிவிருத்தி அரங்கம்' என்ற பெயரில் கூட்டங்களை நடத்தியதால், மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும்; எதிர்காலத்தில் முன்னெடுக்கவேண்டிய அபிவிருத்தித் திட்டங்களை அடையாளம் காணும்; வாய்ப்பு ஏற்பட்டிருந்தது' என்றார்.

'இருப்பினும், இந்த நடைமுறை புதிய முதலமைச்சர் பதவியேற்ற பின்னர் இதுவரையும் செயற்படுத்;தப்படாமல் இருப்பதால், மாவட்ட மட்டங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி தொடர்பான விவரங்களை தங்களினால் அறியமுடியாத நிலை தோன்றியுள்ளதாக சபை அமர்வுகளில் மாகாணசபை உறுப்பினர்கள்; தெரிவித்துள்ளனர்.

எனவே, 'கிழக்கு மாகாண அபிவிருத்தி அரங்கம்' என்ற கூட்டத்தொடரை மீண்டும் திருகோணமலை, மட்டக்களப்பு,  அம்பாறை மாவட்டங்களில் வருடத்துக்கு ஒரு தடவையாவது நடத்துமாறும் 2015ஆம் ஆண்டுக்கான  கூட்டத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துமாறும் கோரியுமே இப்பிரேரணையை சமர்ப்பிக்கப்படவுள்ளது' என அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X