2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

'கடல் மண்ணை அகற்றுற நடவடிக்கை'

Thipaan   / 2016 நவம்பர் 21 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குள் செல்லும் நுளைவாயலில் நிரம்பியுள்ள கடல் மண்ணை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உறுதியளித்துள்ளார் என்று, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் இன்று (21) தெரிவித்தார்.

ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் நுளைவாயல் கடல் மண்ணினால் அடைக்கப்பட்டு கடந்த சில தினங்களாக மீனவர்கள் தமது மீன்பிடி படகுகளை   கடலுக்குள் கொண்டு செல்வதற்கும், கடலில் இருந்து துறைமுக தரிப்பிடத்துக்கு வருவதற்கும் முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இப்பிரச்சினை தொடர்பாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவுடன் பிரதி அமைச்சர் ஹரீஸ் கலந்துரையாடினார். இதன் பலனாக, குறித்த பிரதேசத்தில் நிரம்பியுள்ள மண்ணை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கையினை உடனடியாக  எடுப்பதாக பிரதி அமைச்சர் ஹரீஸிடம் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இப்பிரச்சினைகாரணமாக, தமது அன்றாட ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக, மீனவர் சங்கத் தலைவர் எம்.நசீர் உள்ளிட்ட மீனவர் சங்க பிரதிநிதிகள் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸை சந்தித்து பிரஸ்தாபித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X