2025 மே 19, திங்கட்கிழமை

கடலரிப்புப் பிரச்சினையைத் தீர்க்க கடவுளுக்கடுத்து, முஸ்லிங் காங்கிரஸிக்கே முடியும்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரச்சினையைத் தீர்க்கின்ற அதிகாரமும் சக்தியும் இறைவனுக்கு அடுத்தபடியாக முஸ்லிங் காங்கிரஸிக்கும் அதன் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்குமே உள்ளது. அதனால், பிரதேச சபை உறுப்பினரைக் கூட கொண்டிருக்காத கட்சியை, ஒலுவில் கடலரிப்பு விவகாரத்தில் நம்பத் தயாரில்லையென ஒலுவில் ஜம்மிய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஐ.எல்.ஜலால்தீன் தெரிவித்தார்.

கரையோரப் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர், துறைமுகங்கள் அதிகாரசபை அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர்,          ஸ்ரீ லங்க முஸ்லிங் காங்கிரஸின் தலைவரும் நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரான ரவூப் ஹக்கீம் தலைமையிலான கட்சியின் பிரதிநிதிகளுடன், கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற உரையாடல் ஒன்றில் கலந்துரையாடலின் போது தெரிவித்தார். 

இக்குழுவினர் ஒலுவில் கடற்கரையில் ஏற்படும் கடலரிப்புத் தொடர்பில் ஆய்வு செய்வதற்கென வருகை தந்திருந்தனர். இக்கலந்துரையாடலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், ஐ.எல்.எம்.மாஹிர், ஏ.எல்.தவம், அட்டாளைச்சேனையின் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.அன்சில், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர். மக்கள் சார்பில் கருத்துத் தெரிவித்த, ஒலுவில் ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஐ.எல்.ஜலால்தீன்,

ஊருக்குள் பிரச்சினையென்றால் முதலில் எல்லாக் கட்சிகளும் ஓடிவருந்தான். ஆனால், எந்த கட்சிக்காரர்கள் வந்தாலும் எங்களுக்குப் பிரச்சினையில்லை. ஆனால், கடலரிப்புப் பிரச்சினைக்கு நிரந்தரப் தீர்வினைப் பெற்றுக்தர முடிவது முஸ்லிங் காங்கிரஸினால் மாத்திரமே. 

உதிரிக்கட்சிகள் சில, ஒலுவில் மக்களின் பிரச்சினையினை முன்வைத்து தங்களைத் தேசிய தலைமையாகக் காட்ட முனைகின்றனர். இந்த மாய வலையில் சிக்குண்ட சிலர் ஊரைக் குழப்ப முனைகின்றனர். 

கடலரிப்பும் அதனோடு ஏற்பட்டுள்ள விளைவுகளும், மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பாரிய சவால்களும் மிக விரைவில் தீர்க்கப்படவேண்டியவைகளாகும். கடலரிப்பினைத் தடுப்பதற்காகப் பல கோடி ரூபாய் பெறுமதியான நான்கு தடுப்பணைகள் போடப்பட்டுள்ளது.ஆனாலும் அந்த எல்லையையும் தாண்டிக் கடலரிப்பு இடம்பெறுகின்றது. 

இப்பிரதேச மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர், கரவலை மீன் பிடியினை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கிராமம் முழுக்க மீனவக் கிராமமாகும். இதனால் மக்கள் தொழிலையிழந்து இருக்கின்றனர்.கடலரிப்பினால், கடலோரத்தில் காணப்பட்ட களப்புப் பகுதி தற்போது முற்றாக இல்லாமற் சென்றுள்ளது. கடலரிப்பு நடவடிக்கையினை மேற்கொள்ளும் போது கடலரிப்பினால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில மேற்கொள்ளுமாறு மௌலவி ஜலால்தீன் தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X