2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் வீட்டுப் பிரச்சினை தீர்க்கப்படும்'

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

கல்முனைத்தொகுதியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கின்ற குடும்பங்களின் வீடில்லாப் பிரச்சினையானது கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தின் மூலம்; தீர்த்து வைக்கப்படுமென விளையாட்டுத்துறை பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் சாய்ந்தமருதுப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 சீமெந்து பக்கெட்டுகள் படி  57  குடும்பங்களுக்கு 570 சீமெந்துப் பக்கெட்டுகள் அப்பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வைத்து சனிக்கிழமை (10) வழங்கப்பட்டன.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 'கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தின்; கீழ் சாய்ந்தமருது கரைவாகு, கல்முனை மேற்குவட்டை, மருதமுனை மேட்டுவட்டை ஆகிய பிரதேசங்களில் 50 ஏக்கருக்கு அதிகமான நிலத்தை மண் இட்டு நிரப்புவதற்கான நிதியை மு.கா தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஒதுக்கீடு செய்துள்ளார்.

இவ்வாறு மண் இட்டு நிரப்பப்படும் நிலத்தில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ மற்றும் பல நிறுவனங்களின் உதவியுடன் வீடுகளைக் கட்டி வீடில்லாதவர்களுக்கு வீடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்' என்றார்.  

'கல்முனைத்தொகுதியில் வெற்றுக்காணிகளை காண்பது அரிதாகவுள்ளது. பெருகிவரும் சனத்தொகைக்கேற்ப இத்தொகுதியில் காணிகள் இல்லாமலுள்ளதுடன், காணிகளும் விலையேறியுள்ளன.

இங்கு தற்போதே இந்நிலைமையெனின்,  இன்னும் 5 வருடங்களின் பின்னர் காணிகளைப் பெறுவதும் வீடுகளைக் கட்டுவதும் சவாலாக அமையும். இதைக் கருத்திற்கொண்டு எமது மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப், கல்முனை புதிய நகர திட்டமென்ற திட்டத்தை  உருவாக்கினார். கடந்த ஆட்சிக் காலத்தில் இத்திட்டத்தை எம்மால் நடைமுறைப்படுத்த முடியாமல் போனது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடியபோது, கல்முனை புதிய நகர அபிவிருத்திக் கோரிக்கையை முன்வைத்தோம். அந்த வகையில், கல்முனையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அதற்கான வாக்குறுதியை  அவர் பகிரங்கமாக விடுத்திருந்தார். அதற்கேற்ப கல்முனை புதிய நகர அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு பொறுப்பான அமைச்சுக்கு பிரதமர் வழங்கியுள்ளார்' எனவும் அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X