2025 மே 22, வியாழக்கிழமை

கல்வியியற் கல்லூரிகளை நவீன முறையில் அபிவிருத்தி செய்ய ஏற்பாடு

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

நாட்டிலுள்ள தேசிய கல்வியியற்; கல்லூரிகளை நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்தினால் விசேட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில்  திங்கட்கிழமை (01) மாலை கூட்டம் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'புனிதமான பணியான ஆசிரியத் தொழிலை மேம்படுத்தி நாட்டுக்குத் தேவையான கல்வியாளர்களை உருவாக்குவதற்கு நல்லாட்சி அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது' என்றார்.

'நாடளாவிய ரீதியில் 19 கல்வியியற்; கல்லூரிகள் காணப்படுகின்றன. இக்கல்லூரிகளிலிருந்து வருடத்துக்கு சுமார் 3,000 பேர் ஆசிரியர்களாக நியமனம் பெறுகின்றனர். எதிர்காலத்தில் கல்வியியற் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை பட்டதாரிகளாக மாற்றுவதற்குரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது' எனவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X