2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

கல்வியியல் கல்லூரியின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த டிப்ளோமாதாரி ஆசிரியர்களை இடமாற்ற இணக்கம்

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

வடக்கு, ஊவா, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலுள்ள பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள கல்வியியல் கல்லூரியின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த டிப்ளோமாதாரி ஆசிரியர்களை, கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு இடமாற்றுவதற்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல், இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; 'இம்முறை தேசிய கல்விக் கல்லூரிகளில் டிப்ளோமா பட்டம் பெற்றவர்களுக்கான ஆசிரியர் நியமனத்தின்போது, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 37 பேர் வடக்கு, ஊவா,  சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலுள்ள பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்; தலைவரும் கைத்தொழில மற்றும்; வாணிப அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. இதனை அடுத்து, கல்வி அமைச்சருடன் கைத்தொழில மற்றும்; வாணிப அமைச்சர் இது தொடர்பில் கலந்துரையாடினார். இதன் பயனாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை அவர்களின் சொந்த மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு இடமாற்றுவதற்கு கல்வி அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
ஆகவே, எனது சாய்ந்தமருது அலுவலகத்துடன் தொடர்புகொண்டு தங்களின் விவரங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X