2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'சுதந்திரதினத்தில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்ய வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

இலங்கையின் 68ஆவது சுதந்திர தினத்திலாவது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.

இந்நடவடிக்கைகையை எடுக்காவிடின், புதிய அரசாங்கத்தின் மீது தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடுமெனவும் அவர் கூறினார்.

கல்முனை சைவ மகா சபையின் 47ஆவது ஆண்டு விழா, கல்முனை இராமகிருஷ்ணமிஷன் மகா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (31) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'சுதந்திர தினத்தை  சரியான முறையில் தமிழ் மக்கள் கொண்டாட முடியாதவர்களாக உள்ளனர்.  

கடந்த போராட்ட காலத்தில் தளபதிகளாக இருந்து வழிநடத்திய பல தலைவர்கள் சுதந்திரமாக வாழ்கின்றபோது, எதுவும் தெரியாத பல அப்பாவி இளைஞர்கள் சிறையிலுள்ளனர். அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X