2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

சுனாமியால் பாதிக்கப்பட்டவருக்கு வீடு

Suganthini Ratnam   / 2016 ஜூலை 05 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தம் காரணமாக அம்பாறை, கல்முனைப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நேற்றுத் திங்கட்கிழமை வீடு வழங்கப்பட்டது.

கல்முனை கிறீன் பீல்ட் சுனாமி வீட்டுத்தொகுதியிலேயே இவருக்கு வீடு  வழங்கப்பட்டது.

சுனாமியால்; பாதிக்கப்பட்டவர்களுக்காக வீடுகள் வழங்கப்பட்டபோதும், பாதிக்கப்பட்ட தனக்கு வழங்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டி கல்முனை மேல் நீதிமன்றத்தில் குறித்த நபர்  வழக்குத் தொடுத்திருந்தார்.

குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கல்முனை மேல் நீதிமன்றம் 2016.06.23 அன்று உத்தரவு வழங்கியமைக்கு அமைய இந்த வீடு கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முகமட் ஹனியினால் குறித்த நபருக்கு வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X