Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 நவம்பர் 19 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்,எம்.எஸ்.எம். ஹனீபா, அப்துல்சலாம் யாசீம்
கடந்த சுனாமியின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக சவூதிஅரேபிய அரசாங்கத்தின் உதவியுடன் கட்டி முடிக்கப்பட்ட 500 வீடுகளையும் விரைவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் என சவூதி அரேபிய இலங்கைக்கான தூதரக முஸ்லிம் விவகாரப் பிரிவின் தலைவர் அலி அலோமாரி தெரிவித்தார்.
கடந்த சுனாமியின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக சவூதிஅரேபிய அரசாங்கத்தின் உதவியுடன் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் இதுவரை அம்மக்களிடம் வழங்கப்படாமல் பற்றைக் காடுகளாகக் காட்சி தரும் நிலைமையினையும் ஏன் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவில்லை என்பதையும் அறிந்து கொள்ளும் நோக்கில் நேற்று (18) சவூதி அரேபிய இலங்கைக்கான தூதரக முஸ்லிம் விவகாரப் பிரிவின் தலைவர் அலி அலோமாரி விஜயம் ஒன்றினை மேற்கொண்டு பார்வையிட்டார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த வீடுகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்வதுடன், சேதமடைந்துள்ள வீடுகளையும் திருத்திக் கொள்ள தேவையான நிதிகளை கிழக்கு மாகாண முதலமைச்சரின் மூலம் மேற்கொண்டு, அதற்கான சகல நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொண்டு இந்த வீடுகள் யாவும் மிக விரைவில் வழங்கப்படும் என்றார்.
3 hours ago
19 Jul 2025
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
19 Jul 2025
19 Jul 2025