2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

சீமெந்துப் பக்கெட்டுகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு,வி.சுகிர்தகுமார்

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 22 கிராம அலுவலர் பிரிவுகளில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள 48 குடும்பங்களுக்கு சீமெந்துப் பக்கெட்டுகள் இன்று வியாழக்கிழமை வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், குடும்பம் ஒன்றுக்கு 10 சீமெந்துப் பக்கெட்டுகள் படி 480 பக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 4  இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீமெந்துப் பக்கெட்டுகளே வழங்கப்பட்டுள்ளதாக அப்பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தெரிவித்தார்.

இவ்வாறிருக்க, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் வீடமைப்பு திட்டத்தின் கீழ்  தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினூடாக வறிய குடும்பங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான சீமெந்துப் பக்கெட்டுகள் வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை  (26) காலை நடைபெற்றது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் என்.சுதர்சன் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் தலா 10 பக்கெட்டுகள் படி   38 பேருக்கும்,  தலா 5 பக்கெட்டுகள் படி  4 பேருக்குமாக மொத்தம் 42 பயனாளிகளுக்கு 400 சீமெந்துப் பக்கெட்டுகள் பகிந்தளிக்கப்பட்டன.

ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள வீடுகளின் பூச்சு வேலையினை ஆரம்பிக்கும் முகமாக இவ் இரண்டாம் கட்ட சீமெந்து  வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X