2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'சிறுபான்மையினருக்கு தீர்வை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்'

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 23 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா

கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் சிறுபான்;மை மக்களின் அரசியல் தீர்வு, அதிகாரங்களை பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அம்மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபை அமர்வு செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்றபோது அங்கு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் தோட்டக்கள் இல்லாத இரட்டைக்குழல் துப்பாக்கி போன்று செயற்;படாமல் சிறுபான்மை மக்களின் அரசியல் தீர்வு, அதிகாரங்களை பெறும் வகையில் அழுத்தங்களை பிரயோகித்து செயல்பட வேண்டிய காலம் உருவாகியுள்ளது' என்றார்.

'இந்த மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் இரட்டைக்குழல் துப்பாக்கி போன்று  செயற்;படவுள்ளதாக கூட்டமைப்பின் செயலாளரும் மாகாண விவசாய அமைச்சருமான துரைராசசிங்கத்தினால்; வெளியிடப்பட்ட அறிக்கை குறித்து மகிழ்ச்சியடைகின்றேன். இருப்பினும், கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் தோட்டாக்கள் இல்லாத வெறும் இரட்டைக்குழல் துப்பாக்கி போன்று செயற்படாமல் சிறுபான்மை மக்களின் அரசியல் தீர்வு, அதிகாரங்களை பெறும்;  சக்தியாக இயங்கிச் செயற்பட வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.  

'மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் கிழக்கு மாகாணசபையை 2008ஆம் ஆண்டு எவ்வித அதிகாரமும் இல்லாத நிலையில் பாரம் எடுத்தோம். இந்நிலையில், கடந்த ஆறரை வருடகாலமாக இச்சபை வளர்ச்சியடைவதற்கு  அர்ப்பணிப்புடன் நாம் செயற்பட்டுள்ளோம். நாம் எல்லோரும் ஒன்றிணைந்து கிழக்கு மாகாணத்தில் இன உறவுகளை தொடர்ந்து வளர்ப்பதற்கும் எமக்கான  அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய காலம் உருவாகியுள்ளது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X