2025 மே 17, சனிக்கிழமை

'75 சதவீதமான மக்கள் தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்'

Niroshini   / 2016 நவம்பர் 26 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

சரியான உணவு பழக்க வழக்கம் இன்மையால் இலங்கையில் 75 சதவீதமான மக்கள் தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை சுகாhதார வைத்தியதிகாரி ஏ.எல். அலாவுதீன் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் மற்றும் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கான ' போசாக்குக்கான பல்துறை சார் செயற்திட்டம்' தொடர்பான பயிற்சிப் பட்டறை, நேற்று வெள்ளிக்கிழமை (25) மாலை, பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

 அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவையான சரியான அளவில் உணவுகளை நாளாந்தம் உரிய நேரத்தில் உண்பதற்கு பழகிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் சுகதேகிகளாக நாம் வாழ முடியும்.

ஒரு சமுதாயத்தை ஆரோக்கியமானதாக மாற்றுவதற்கு போசாக்கு, சுகாதாரம் தொடர்பாக ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.

சுகாதார பழக்கவழக்கங்களை தங்களுடைய வாழ்க்கையில் பின்பற்றி நடக்காதவர்கள் இன்று பல பாரிய நோய்களுக்கு ஆளாகி வருவதை நாம் காணுகின்றோம்.

அரசாங்கம் இவ்வாறான நோய்த் தாக்கங்களிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு பல்வேறு வேலைத்திட்டங்களை சுகாதார அமைச்சுனூடாக முன்னெடுத்துள்ளது.

தொற்றா நோயினால் நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்படுவதோடு, அரசாங்கத்துக்கு பாரிய செலவும் ஏற்படுகின்றது.

எனவே, நாமும் சிறந்த சுகாதார பழக்கவழக்கங்களை கடைப்பிடித்து, நாட்டின் அபிவிருத்திக்கு மட்டுமல்லாது எமது வாழ்க்கையையும் சிறந்த முறையில் முன்கொண்டு செல்ல வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .