Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 நவம்பர் 16 , மு.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ், எஸ்.எம்.எம்.றம்ஸான்
'கல்முனைஅஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 11 வயதுடைய சிறுவனின் மரணம் தொடர்பில், சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது' என கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்குப் பொறுப்பான வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.எல்.எப். றஹ்மான் தெரிவித்தார்.
சிறுவனின் மரணத்துக்கு, வைத்தியர்கள் கவனயீனமாக நடந்து கொண்டமையும், உரிய சிகிச்சை வழங்கப்படாமையுமே காரணம் என சமூக வலைத்தளங்களிலும் பேஸ்புக் பக்கங்களிலும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதற்கு விளக்கம் தெரவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அத்தியட்சகர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (15) மாலை நடைபெற்றது. இங்கு விளக்கமளிக்கும் போதே வைத்திய அத்தியட்சகர் இவ்வாறு தெரிவித்தார் .
டொக்டர் ஏ.எல்.எப். றஹ்மான் இங்கு மேலும் விளக்கமளிக்கையில்;
'டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 11 வயதுடைய சிறுவன், கடந்த 4 ஆம் திகதி எமது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்டதிலிருந்து 6 நாட்களுக்குத் தேவையான இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை வளங்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன.
9ஆம் திகதி வரைக்கும் சிறுவன் (நோயாளி) ஆபத்தான நிலையில் காணப்படவில்லை. 9ஆம் திகதி திடீரென ஏற்பட்ட அதிகளவான காய்க்சல், வலிப்பு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சை மற்றும் சி.ரி ஸ்கேனுக்கு அனுப்பப்பட்ட போது மூளை வீக்கமடைந்து பாதித்திருந்தமை தெரிய வந்தது.
டெங்கு நோயால் இவ்வாறு ஏற்படுவது அரிதாகும். இந்த நிலையில் மரணத்தை தடுப்பது கடினமாகும். எனவே டெங்கு பரவாமல் தடுப்பதில் பொதுமக்கள் ஆர்வத்தோடும் விரிப்புணர்வோடும் செயற்பட வேண்டும்.
2016 ஆம் ஆண்டில் மட்டும் 292 பேருக்கு நாம் டெங்கு நோய்க்குரிய சிகிச்சை வழங்கியுள்ளோம். உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திலிருந்து ஏற்கெனவே இரண்டு பேருக்கு எமது வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கியுள்ளோம். குறித்த சிறுவனின் உயிரிழப்பு துரதிர்ஷ்டவசமானது, தவிர்க்க முடியாதது' என்றார்.
2 hours ago
19 Jul 2025
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Jul 2025
19 Jul 2025