Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 செப்டெம்பர் 21 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
மாணவர்களிடையே ஏற்படுத்தப்படும் சமாதானம் இன ஒற்றுமைக்கு வழிகோலும் என திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் தெரிவித்தார்.
சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று இராமகிருஸ்ண மகா வித்தியாலயத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஒன்று கூடல் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
மாணவர்களிடையே வளர்க்கப்படும் சமாதான எண்ணமும் மனநிலையும் அவர்களை சிறந்த பிரஜைகளாக உருவாக்க உந்துகோலாக அமையும்.
இதன் மூலம் பிரதேச ரீதியான ஒற்றுமை ஏற்பட்டு அது தேசிய ரீதியிலான மாற்றத்தை கொண்டு வருவதுடன் சர்வதேச ரீதியிலும் வலுப்பெறும் என்றார்.
இதேவேளை இங்கு உரையாற்றிய திருக்கோவில் வலய சமதான கல்விப்பணிப்பாளர் எஸ்.இராசமாணிக்கம் குறிப்பிடுகையில்,
பல நதிகள் கிளைகளாக பிரிந்து செல்கின்ற போதிலும் அது கடலினுள் ஒன்றாக சங்கமிக்கின்றது. அதேபோல் மதங்களும் வழிபாடுகளும் வேறாக இருந்தாலும் அது ஒரே இறைவனை நோக்கிய பயணமாக இருக்கின்றது.
ஆகவே மாணவர்கள் இதனை நன்குணர்ந்து மதவேறுபாடின்றி ஒற்றுமையுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்றார்.
திருக்கோவில் வலய சமதான கல்விப்பணிப்பாளர் எஸ்.இராசமாணிக்கம் ஏற்பாட்டில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வணக்கத்துக்குரிய பிரியங்கர சிறிசங்கர தேரர், ஐயூப் யூசுப் மௌவி, மேஜர் விஜயசிங்க. அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
30 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago
1 hours ago