Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.சி.அன்சார்
'நீண்டகாலமாக அபிவிருத்தியில் பின்தங்கிக் காணப்படும் சம்மாந்துறைப் பிரதேசத்தை அபிவிருத்தியின் பால் இட்டுச் செல்ல நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற என்னை அரசியல் வேறுபாடுகளை மறந்து மக்கள் அனைவரும் மிகத் தாரளமாக பயன்படுத்திக்கொள்வதுடன், அபிவிருத்திகளாலும் வளங்களாலும் சம்மாந்துறையை செழிப்புள்ள நகரமாக மாற்றுவதற்கு பங்காற்ற முன்வர வேண்டியது மக்களது கடமையாகும்' என திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.
திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூரின் அயராத முயர்ச்சியின் பலனாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் சுமார் 5 கோடியே 20 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் சம்மாந்துறை, நெய்னாகாடு பட்டம்பிட்டி நீர்ப்பாசனப் பிரிவுக்குட்பட்ட 16 வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 'கடந்த 8 வருடங்களாக சம்மாந்துறைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இன்மையால் விவசாயிகளின் தேவைகள் கிடப்பில் போடப்பட்டிருந்ததோடு, அனைத்துத்துறைகளும் அபிவிருத்தியில் பின்தங்கி காணப்பட்டன. இதன் காரணமாக ஒரே தடவையில் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற முடியாமைக்கு நான் மிகவும் வருத்தகின்றேன். விவசாயிகளின் பெரும்பான்மையான தேவைகள் விரைவில் பூர்த்தி செய்யப்படும்.
நான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்று ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில் சம்மாந்துறை பிதேசத்தில் பல வேலைத்திட்டங்கள் நடந்து முடிந்துவிட்டன. பஸ் தரிப்பு நிலையம், வீதி அபிவிருத்தி, ஆடைத் தொழிற்சாலை நிர்மாணம், தொழில் பேட்டை நிறுவுதல் போன்ற பல முக்கிய திட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளேன். இதனை அரசியல் காழ்புணர்ச்சி கொண்ட சிலர் தடுத்து வருகின்றனர்.
இதனைக் கண்டு நான் அஞ்சப்போவதில்லை. மக்கள் அனைவரும் எனக்கு ஆதரவு அளித்தால் நாம் இழந்து நிற்கின்ற அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் மிக அவசரமாக கொண்டு சேர்க்கமுடியும்.
எனவே, கடந்த காலங்களில் அரசியலில் நாம் வௌ;வேறு துருவங்களாக பிரிந்து நின்றதால் ஏமாறிய காலத்தை விடுவோம். தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான என்னை முழுமையாகப் பயன்படுத்தி, மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர் என்ற அரசியல் அங்கிகாரத்தின் மூலமும் பல்வேறு அபிவிருத்திகளைப் பெற்றெடுக்க மக்கள் அனைவரும் என்னோடு இணைந்து செயற்பட முன்வரவேண்டும். அப்போது சம்மாந்துறை மண்ணினை அபிவிருத்தியின் பால்இட்டுச் செல்லலாம்' என்றார்.
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago