2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

சம்மாந்துறை வலய ஆசிரியர்களுக்கு நவீன முறையில் பயிற்சி வழங்கத் தீர்மானம்

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை, சம்மாந்துறை வலயத்தைச் சேர்ந்த சுமார் 1,000 ஆசிரியர்களுக்கு சர்வதேச ரீதியாக நவீன முறையில் பயிற்சி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, சம்மாந்துறை வலய ஆசிரியர் பயிற்சி நிலையத்தை அமைக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர், இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

இந்நிலையத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நடவடிக்கை, சம்மாந்துறைப் பிரதேசத்தில் சனிக்கிழமை (01) இடம்பெற்றது.  

கட்டட நிர்மாணத்துக்காக 3 கோடி 30 இலட்சம் ரூபாய்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X