2025 மே 19, திங்கட்கிழமை

'த.தே.கூட்டமைப்புடனான உறவைச் சீர்குலைக்க சிலர் முற்படுகின்றனர்'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எல்.எம்.ஷினாஸ், எம்.சி.அன்சார்

தமிழ்த்; தேசியக் கூட்டமைப்புடன் பரஸ்பரமாக செயற்பட எதிர்பார்க்கும்போது சில காளான் அமைப்புகள், கட்சிகளும் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன என என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல்  அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

'அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்குதல்' எனும் நோக்கத்தை அடைந்துகொள்வதன் பொருட்டு அம்பாறை, கல்முனை பிரதான நீர்க்குழாய் மற்றும் கல்முனை நீர் உந்தும் நிலையத்தை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு, சனிக்கிழமை  (13) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'தற்போது நாடாளுமன்றத்திலும் வெளியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பரஸ்பரமாக செயற்படுகிறோம். நடப்பதற்கு சாத்தியமே இல்லாத விடயத்தை நாங்கள் எழுதிக்கொடுத்து விட்ட மாதிரி பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுகின்றனர். இவர்கள் மக்களை குழப்புவதற்கு பொய்களைக் கூறி சின்ன விடயங்களை ஊதிப் பெருப்பிக்கிறார்கள்' என்றார்.

'தற்போது நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. யாரையும் கடத்தி அச்சுறுத்தி எதனையும் செய்யலாமென்ற காலம் மாறியுள்ளது. இதனைத் தலைகீழாக மாத்தி குழப்பத்தை உண்டாக்க முடியாது. நிரந்தரத் தீர்வென்பது எல்லாச் சமூகமும் ஏற்கக்கூடிய, நிம்மதியான தீர்வாக இருக்க வேண்டும். இதனைச் சாதிப்பதற்கான தருணம் நெருங்கி வருகிறது. இதற்குச் சில விட்டுக்கொடுப்புகள் வேண்டும்' அவர்  எனவும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X