Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் அடுத்த இரு ஆண்டுகளில், தென்னை மரம் மூலம் வருமானம் பெறும் என ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.
அம்பாறை, மகாஓயா, ரம்பகன்ஓய பிரதேசத்தில் நேற்று(11) நடைபெற்ற 'தெங்கு உற்பத்தி பொருட்களின் பெறுமானத்தை உறுதிப்படுத்தல்' எனும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தென்னம் கன்றுகளை வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஒரு தென்னை மரம் ஒரு முக்கிய பொருளாதார விளை பொருள். ஆகவே அவ்வாறான பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் எதிர்காலத்தில் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஐந்து தென்னம் கன்றுகள் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன் மூலம் மக்களது பொருளாதாரத்தை உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒரு குழந்தை வளர்ந்து எவ்வாறு நமக்கு உதவி புரிகின்றதோ அதேபோல், தென்னம்பிள்ளையும் வளர்ந்து எமக்கு உதவி புரியும் என்றார்.
மேலும்,தேங்காய் உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க எதிர்காலத்தில் திட்டங்கள் பல உள்ளன. தேங்காய் பவுடர், காலே, தேங்காய் பால், தேங்காய் ஓடுகள் முதலியனவற்றின் மூலம் ஏற்கனவே ஒரு பெரிய வருமானம் எமக்கு கிடைக்கின்றது.
அதன்படி, தென்னை மரம் அடுத்த சில ஆண்டுகளில் குடும்பங்களின் வருமானத்தை ஈட்டி கொடுக்கும் முக்கிய பொருளாக மாறப்போகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், பெற்றோலிய வளங்கள் பிரதி அமைச்சர் டொக்டர் திருமதி அனோமா கமகே உள்ளிட்ட அரசியல்வாதிகள் பலர் கலந்துகொண்டனர்.
21 minute ago
2 hours ago
2 hours ago
01 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago
2 hours ago
01 Oct 2025