Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
அம்பாறை மாவட்டத்தில் வெளிக்களப் பணிகளில் ஈடுபடும் 06 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த அரச வெளிக்கள உத்தியோகஸ்தர்கள், எதிர்வரும் புதன்கிழமை காலை 8.30 மணியளவில் அம்பாறை மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக பாரிய கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மாவட்ட அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் கே.எம்.கபீர் தெரிவித்தார்.
விவசாயத் திணைக்களம், நீர்ப்;பாசனத் திணைக்களம், கிராம உத்தியோகஸ்தர் சங்கம், அபிவிருத்தி உத்தியோகஸ்;தர்கள் சங்கம், பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள் சங்கம், வெளிக்கள உத்தியோகஸ்தர்கள் ஒன்றியம் ஆகியவற்றின் ஏற்பாட்டிலேயே இக்கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் பணி புரிகின்ற அரச வெளிக்கள உத்தியோகஸ்தர்களில் இதுவரையில் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படாத சுமார் 5,000 பேருக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு கோரி இக்கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வந்த அரச வெளிக்கள உத்தியோகஸ்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் திட்டமானது ஏனைய மாவட்டங்களில் வழங்கப்பட்டது. மேலும், நல்லாட்சி அரசாங்கத்தின்; காலத்திலும் வழங்கப்பட்டபோதிலும், அம்பாறை மாவட்ட வெளிக்கள உத்தியோகஸ்தர்கள் சுமார் 5,000 பேருக்கு இதுவரையில் வழங்கப்படாமல் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத்திட்டத்தில் இதனை உள்ளடக்கி அவர்களுக்கான மோட்டார் சைக்கிள்;களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இக்கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது, அரசாங்கத்தை வலியுறுத்தவுள்ளதாகவும்; அவர் கூறினார்.
மேலும், இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து அரச வெளிக்கள உத்தியோகஸ்தர்களையும் பங்குபற்றுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago