Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 16 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
தகவல் அறியும் சட்டமூலம் சிறப்பாக முன்வைக்கப்பட்ட நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தை வகிக்கின்றது என சட்டத்தரணி கே.ஐங்கரன் தெரிவித்தார்.
முதலாவது இடத்தை மெக்ஸிக்கோ வகிக்கின்றது எனவும் அவர் கூறினார்.
மனித எழுச்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில்; 'தகவலுக்கான உரிமை' எனும் தலைப்பில் சிவில் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பொது நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஒரு நாள் கருத்தரங்கு அக்கரைப்பற்று ரீ.எப்.சீ. கூட்ட மண்டபத்தில் நேற்று (16) நடத்தப்பட்டது. இதில் பிரதம வளவாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'தகவல் அறியும் சட்டமூலமானது இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் கொண்டு வரப்பட்டு 35 வருடங்களைக் கடந்தும், இன்னும் முறையாகச் செயற்படுத்தப்படவில்லை. ஒரு ஜனநாயக அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமும் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான சுதந்திரமும் அவசியமாகும்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் செயன்முறைகளையும் அறிந்துகொள்வதற்கு தகவல் அடிப்படையாக அமைகின்றது.
இத்தகைய சட்டமூலம் கொண்டு வரப்பட்டமைக்கு அமைய திணைக்களங்கள், அவற்றின் கிளை நிறுவனங்கள் என்பவற்றில் தகவல் அதிகாரி நியமனம் செய்யப்படுவது அவசியமாகும். அவ்வாறு அதிகாரியை நியமிப்பதற்கு காலதாமதம் ஏற்படுமாயின், நிறுவனத் தலைவரே தகவல் அதிகாரியாகச் செயற்படுவார்.
இச்சட்டமூலத்தின் பிரகாரம் எழுத்து மூலமாக தகவல் கோரப்படுமிடத்து 28 நாட்களுக்குள் எழுத்து மூலம் தகவல் அதிகாரியினால் பதில் அளிக்க வேண்டும்.
இச்சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம் அரசாங்க நிறுவனங்கள், திணைக்களங்களின் ஆவணங்கள் 10 வருடங்களுக்குப் பேணிப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அவ்வாறு ஆவணங்கள் பாதுகாக்கப்படாது அழிக்கப்பட்டால் அல்லது காணாமல் போனால் அது தண்டனைக்குரிய குற்றமாக அமையும்.
ஒரு நாட்டின் அல்லது அரசாங்கத்தின் தகவல்களை முன்கூட்டியே வெளியிடுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரம், வரி விடயங்கள், பொருள் சேவைகளின் கட்டுப்பாட்டு விலை, வர்த்தக ஒப்பந்தங்களுக்கு குந்தகம் ஏற்படுமாயின் தகவல் மறுக்கப்படலாம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
3 hours ago
8 hours ago
8 hours ago