2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'தலாவருமானம் குறைவாக இருப்பதற்குக் காரணம் தொழில்நுட்பக் கல்வியில் ஆர்வம் காட்டாமையாகும்'

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 02 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அபிவிருத்தி அடைந்த நாடுகளில் தலா வருமானம் 10 அமெரிக்க டொலருக்கு அதிகமாக இருக்கின்ற நிலையில் எமது நாட்டு தலா வருமானம் 2500 தொடக்கம் 4 ஆயிரம் வரையான அமெரிக்க டொலராக இருப்பதற்கு காரணம் இலங்கையில்  இளைஞர், யுவதிகள் தொழில்நுட்பக் கல்வியைக் கற்பதில் ஆர்வம் காட்டாமையே ஆகும் என திருக்கோவில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியின் தொழில் ஆலோசனை வழிகாட்டல் செயலமர்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் 'இலங்கையில் சகல வளங்களும் இருந்த போதிலும் இன்று இலங்கையில் சுமார் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் தொழிலற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இதற்கு காரணம் சிறந்த  தொழில் வழிகாட்டல் ஆலோசனைகள் கிடைக்கப் பெறாமையும் அவர்களிடம் இருக்கின்ற முயற்சியின்மையுமே பிரதான காரணங்களாக இருக்கின்றன.

இலங்கை நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னர் சுதந்திரம் பெற்ற சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இன்று தலாவருமானம் 10ஆயிரம் அமெரிக்க டொலராக இருப்பதுடன் அபிவிருத்தியும் கண்டுள்ளன. ஆனால் எமது நாடு இன்றும் தலாவருமான 4ஆயிரம் அமெரிக்க டொலராகவே இருப்பதுடன் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் பட்டியலில் தான் இருக்கின்றது. இதனை விடுத்து எமது நாடும் அபிவிருத்தி அடைந்த நாடாக மாறவேண்டுமென்றால் நாம் உலகத்துடன் போட்டி போடக்கூடிய தொழில்நுட்ப கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும்' என்றார்.

இங்கு அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியின் தொழில் வழிகாட்டல் மற்றும் உளவளத்துணை ஆலோசகர் எம்.எஸ்.எம்.பிஷ்ரின் தெரிவிக்கையில், 'உலக அளவில் இலங்கை நாடு தொழில்நுட்ப தொழிலில் 40 வருடங்கள் பின்தங்கி இருக்கின்றோம். இதனை ஈடுசெய்து நவீன தொழில்நுட்ப உலகுடன் நாமும் கைகோர்க்க வேண்டும். இதற்கமைவாக எமது நாட்டு இளைஞர்களை தொழில்நுட்ப கல்வியில் ஈடுபட தூண்டல் கொடுக்க வேண்டும்.

இலங்கை அரசு தொழிநுட்ப உலகத்துடன் போட்டி போடக்கூடிய நிலையில் நவீன தொழில்நுட்ப துறைக்கான கல்வியை கற்கும் நோக்கில் 30 தொழில்நுட்ப கல்லூரிகள், 09 தொழில் நுட்பவியல் கல்லூரிகள், 5 தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் மற்றும் 1 பல்கலைக்கழகம் என்பன நாடு பூராகவும் நிறுவப்பட்டு நவீன தொழில் நுட்ப கற்றலுக்கான வசதிகள் இருக்கின்ற போதிலும் எமது இளைஞர்கள் கற்பதில் ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை.

இதனை விடுத்து தொழில் துறைக்கு கேள்வியற்ற கல்விகளில் கூடிய ஆர்வம் காட்டுகின்றனர்.இதனை மாற்றியமைக்க வேண்டும்.இலங்கையில் கலைத்துறைக்கான தொழில் வாய்ப்பு 21வீதம் இருக்கும் நிலையில் 51வீதத்தினர் அதனை கற்றுக் கொண்டு இருக்கின்றனர். இதேவேளை 27வீதம் முகாமைத்துவ துறையில் தேவை இருக்கின் நிலையில் 24 வீதமானவர்கள் கற்றுக் கொண்ட இருப்பதுடன் மருத்தவ துறைக்கு 43வீதம் தேவை இருக்கும் நிலையில் 37வீதத்தினர் கற்றுக் கொண்டு இருக்கின்றனர்.

எனவே தொழில் உலகம் எதிர்பார்க்கும் வகையில் எமது இளைஞர்களை தயார்படுத்த வெண்டிய ஒரு கட்டாய சூழலில் நாம் அனைவரும் இருக்கின்றோம்.சந்தர்ப்பங்களை தவறவிடாது திருக்கோவில் பிரதேசத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ள அக்கரைப்பற்று தொழிநுட்ப கல்லூரிக்கான ஆட்களை சேர்க்கும் நோர்முகப் பரீட்சையில் கலந்து கொள்ளுமாறு அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .