2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'நாங்களே சரியான அரசியல் தலைமைகள் என்று கூறி தமிழ் மக்களை குழப்பும் வேலையை செய்கின்றார்கள்'

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

தமிழ் மக்களின் ஏகோபித்த அரசியல் தலைமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்கள் மத்தியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இருந்தும், பல்வேறு அரசியல் தலைமைகள் நாங்களே சரியான அரசியல் தலைமைகள் என்று கூறி அம்மக்களை குழப்பி ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வேலையை இன்றும் செய்கின்றார்கள் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறைத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனை வருடாந்தம் நடத்தும் சர்வதேச சிறுவர் தின விழா சனிக்கிழமை (1) மாலை அங்கு நடைபெற்றது. அங்கு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்  இருக்கும் நிலைமை, எங்களுக்குள் இல்லாமல் இல்லை. எங்களுக்குள்ளும் இவ்வாறான செயற்பாடுகள் காணப்படுகின்றன.

இந்த நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தியதன்  முக்கிய நோக்கமானது அனைவருக்கும் சரியான நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே ஆகும்.  நல்லாட்சிக்குரிய அரசாங்கத்தை ஏற்படுத்திய பெருமை தமிழ், முஸ்லிம் மக்களையே சாரும்' என்றார்.

'மேலும், தற்போது வடக்கு, கிழக்கு இணைப்புப் பற்றி பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.  வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டுமாயின், அரசியல் ரீதியாக நாங்கள் உறுதி செய்த விடயங்களில் எந்தவித இழப்பீடும் இல்லாமல் அதற்கும் மேலாக வடக்கு, கிழக்கு மக்கள் அனைவரும் அனுபவிக்கக்கூடிய நிலைவரம், அரசியல் அந்தஸ்து, அதிகாரம்  ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும்' எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X