2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

'நடமாடும் சேவை நன்மை பயக்க வேண்டும்'

Niroshini   / 2016 நவம்பர் 21 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

பெயரளவில் மட்டும் நடாத்தப்படுகின்ற ஒரு நடமாடும் சேவைகளாக இது அமையக்கூடாது.மக்களுக்கு நன்மைகள் பயக்கக்கூடிய சேவைகளாக இது அமைய வேண்டும் என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

இவ்வாறான நடமாடும்சேவை நடத்துவதாக இருந்தால் குறித்த பிரதேச மக்களுக்கு சரியான முறையில் அறிவித்தல் வழங்கப்பட்டிரிக்க வேண்டும். இந்த அறிவித்தல் சரியான முறையில் பொதுமக்களிடத்தில் வழங்கப்படவில்லை என்பதை நினைக்கும்போது ஒரு கவலையாகவுள்ளது என்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கூறினார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் கீழ் இயங்கும், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் நடமாடும் சேவை, குறித்த பணியகத்தின் அம்பாறை மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை(19) அட்டாளைச்சேனை பிரதேச சபைக் காரியாலத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

மக்களின் குறைகளை கண்டறியும் நோக்கிலும் அதற்கான தீர்வுகளை வழங்கும் வகையிலேயே இவ்வாறான சேவைகளை மக்களின் காலடிக்கு எடுத்துச் சென்று இந்த சேவைகள் நடாத்தப்பட்டு வருகின்றது.

இதன் மூலம் பொதுமக்கள் பல நன்மைகள் அடையவேண்டும் என்பதற்காக இன்றைய நல்லாட்சி அரசாங்கம் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து அதற்காக பல உயர் அதிகாரிகளையும் உத்தியோகத்தர்களையும் இச்சேவையில் ஈடுபடுத்தியும் வருகின்றது.

இவ்வாறு முன்னெடுக்கப்படுகின்ற இந்த நடமாடும்  சேவைகளை நடாத்துவதற்கு முன்னர் பொதுமக்களுக்கு சரியான முறையில் அறிவித்தல் வழங்கியிருக்கப்படல் வேண்டும். இது அவ்வாறு இடம்பெறவில்லை என்பது ஒரு கவலை தரக்கூடியதாக உள்ளது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X