Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
'மக்கள் வழங்கிய ஆணைக்கிணங்க அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவனாக செயற்படுவேன். அவர்களுக்கு நன்றியுடையவனாக இருப்பேன்' பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன் (ரொபின்) தெரிவித்தார்.
தேர்தல் வெற்றி தொடர்பில் மக்களுக்கு நன்றி கூறும் வகையில் நேற்று (25) அக்கரைப்பற்றில் கிராமங்கள் தோறும் சென்ற அவர், ஸ்ரீவம்மியடிப்பிள்ளையார் கோவிலுக்கும் வருகை தந்தார். அங்கு குழுமியிருந்த கோவில் நிர்வாக சபையினர் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'தேர்தலில் வெற்றி பெறுவது என்பதைவிட மக்களுக்கு சேவையாற்றுவதென்பதே சவாலான விடயம் என்பதை உணர்கின்றேன். அவ்வாறான சவாலை ஏற்றுள்ள நான் கிடைக்கப்பெற்றுள்ள 5 வருடத்தினையும் முறையாக பயன்படுத்;தி மக்களின் பிரச்சினைகளுக்கு முடியுமானவரை தீர்வு காண முயற்சிப்பேன்.
அம்பாறை மவாட்டத்தை பொறுத்தவரையில் தமிழ் மக்களது பல்வேறு தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளது. ஆகவே, எதிர்நோக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் மக்கள் நலன்சார்ந்த வேலைத்திட்டங்களுக்காக ஒதுக்குவதே தனது குறிக்கோள் எனவும் மக்கள் தங்களது பிரச்சினை தொடர்பில் தன்னிடம் 24 மணிநேரமும் தெரிவிக்கலாம்.
இன, மத, சாதி வேறுபாடின்றி அனைத்து மக்களையும் அரவணைத்துச் பக்கச்சார்பின்றி செயலாற்றுவேன். தமிழ்த் தேசியத்தை மனதில் நிலை நிறுத்தி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் கீழ் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் அதேவேளை அபிவிருத்தியையும் முன்னெடுப்பேன்' என்றார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago