Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Gavitha / 2016 ஓகஸ்ட் 08 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
பழைமை வாய்ந்த கல்முனை பொதுச் சந்தைக்கட்டடக் தொகுதியின் புனர்நிர்மாணப் பணிகளை நேர்த்தியாக முன்னெடுப்பதற்கு, வர்த்தகர்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என்று மாநகர ஆணையாளர் ஜெ.லியாகத் அலி தெரிவித்தார்.
மாநகர சபையின் பொறியியலாளர் ரி.சர்வானந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை (08) பொதுச் சந்தைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இந்தச் சந்தையின் புனர்நிர்மாணப் பணிகளை ஆரம்பிப்பது தொடர்பில் வர்த்தகர்களுடன் ஆராய்ந்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;
'கல்முனை பொதுச்சந்தைக் கட்டடக் தொகுதியை புனரமைப்பு செய்வதற்காக முன்னாள் மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பரின் வேண்டுகோளின் பேரில் நகர திட்டமிடல் அமைச்சின் 2016ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் 2 கோடியே 60 இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.
எதிர்வரும் டிசெம்பர் மாத இறுதிக்குள் இப்புனர்நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்ய வேண்டும் என அமைச்சினால் நாம் பணிக்கப்பட்டிருப்பதனால், இதனை மிகவும் துரிதமாக முன்னெடுக்க வேண்டியுள்ளது. இதற்கு வர்த்தகர்களின் ஒத்துழைப்பே மிகவும் அவசியமாக வேண்டப்படுகிறது' என்று அவர் குறிப்பிட்டார்.
'1980ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரினால் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்ட இந்தச் சந்தைக் கட்டடமானது, பிற்பட்ட காலங்களில் வர்த்தகர்கள் தன்னிச்சையாக புதிய கடைகளை அமைத்துக் கொண்டதனால், சந்தையின் வடிவமும் புறச்சூழலும் முற்றாக மாற்றியமைக்கப்பட்டு, அனைத்து வர்த்தகர்களும் பொது மக்களும் சிரமங்களை அனுபவிப்பதுடன், அதனை பராமரிப்பதில் எமது மாநகர சபை நிர்வாகமும் பெரும் சவால்களை எதிர்நோக்கி வருகின்றது.
ஆகையினால் ஒதுக்கப்பட்டிருக்கின்ற நிதியைக் கொண்டு இதனைத் திட்டமிட்ட அடிப்படையில் மிகவும் குறுகிய காலத்துக்குள் புனரனமைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
18 May 2025