2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பாலையடிவட்டை கிரான்கோவை மேற்கு விவசாயக் காணியில் நெற்செய்கையில் ஈடுபட அனுமதிக்கவும்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, லகுகல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை கிரான்கோவை மேற்கு விவசாயக் காணியில் தாம் நெற்செய்கையில் ஈடுபடுவதற்கு  ஆவன செய்யுமாறு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று புதன்கிழமை மகஜர் அனுப்பியுள்ளதாக பாலையடிவட்டை கிரான்கோவை மேற்கு விவசாய அமைப்பின் செயலாளர் எம்.ஏ.இஸ்மாலெப்பை தெரிவித்தார்.

அம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, '503 ஏக்கரைக் கொண்ட இவ்விவசாயக் காணியில் 250 குடும்பங்கள், நெற்செய்கையில் ஈடுபட்டுவந்தன. தற்போது இக்குடும்பங்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளன' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'1976ஆம் ஆண்டு முதல்; நெற்செய்கையில்  ஈடுபட்டுவந்த விவசாயிகளுக்கு யுத்தம் காரணமாக அக்காணிக்கு போகமுடியாத நிலைமை ஏற்பட்டது. இதன் பின்னர், 1990ஆம் ஆண்டு; காலப்பகுதியில் நெற்செய்கை மேற்கொள்ளுமாறு அப்போதைய வன இலாகா அதிகாரிகள் மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட காணி அதிகாரி ஆகியோர் தற்காலிகமாக அனுமதி வழங்கியிருந்தனர்.

அக்காணியில் நாம் நெற்செய்கையில் ஈடுபட்டுவந்த வேளையில் லகுகல, கித்துலான தேசிய வனப்பூங்காவுக்கு யானைகள் செல்லும் நுழைவாயிலெனக் அக்காணியைக் காரணங்காட்டிய வன இலாகா அதிகாரிகள், 2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் அக்காணிக்குச் செல்லவிடாது தடுத்துள்ளனர். எனவே, அக்காணியில் நெற்செய்கையில் ஈடுபடுவதற்கு ஆவன செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X