2025 மே 19, திங்கட்கிழமை

பணிப்பகிஷ்கரிப்பு

Suganthini Ratnam   / 2016 ஜூலை 27 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எஸ்.எம்.ஹனீபா
 
பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் கல்விசாரா ஊழியர்களினது ஏழு அம்சக் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்காமையினைக் கண்டித்தும் உரிய தீர்வு கிட்டும்வரையும் இன்று புதன்கிழமை முதல் தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஒலுவில் வளாகத்தில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஏழு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இன்றையதினத்திலிருந்து அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் வேலை நிறுத்தத்தையும் முன்னெடுத்து வருவதாகவும் தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் வை.முபாறக் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் பணியாற்றிவரும் ஊழியர்களின் நலன்களை கருத்தில் கொண்டு அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சங்க சம்மேளனத்தின் தீர்மானத்துக்கமைய இப்பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  

ஆக்கத்திறனுடைய ஓய்வூதியத் திட்டத்தினை அறிமுகம் செய்தல், வைத்திய காப்புறுதித் திட்டத்தினை அறிமுகம் செய்தல்,  ஓய்வூதிய வயதினை 60க்கு மறுசீரமைக்கக் கோரல், 2016ஆம் ஆண்டின் அரச சம்பள திட்டத்துக்கு சமமான சுற்றறிக்கைய வெளியிடுதல், ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஓய்வூதியத்தை கொடுப்பனவுக்கு பங்களிப்புச் செய்தல், கொடுபபனவுகளை அதிகரிக்கச் செய்தல் உள்ளிட்ட ஏழு அம்சங்களை உள்ளடக்கியே இப்போரட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X