Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 மார்ச் 13 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா,பைஷல் இஸ்மாயில்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் விவகாரம் தொடர்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டமைக்கமைய அதை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக மு.கா. தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள மு.கா. வின் தேசிய மாநாடு தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நடவடிக்கை, ஒலுவில் கிரீன் வில்லா ஹோட்டலில் சனிக்கிழமை (12) மாலை நடைபெற்றது. இதன்போது, ஊடகவியலாளரின் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'தற்போது தொகுதி, மாவட்ட, பிரதேசங்கள் ரீதிகளாக தேசியப்பட்டியல் விவகாரம் எதிர்பார்ப்புகளுடன் பேசப்படுகின்றது. மக்களின் இந்த எதிர்பார்ப்பானது கட்சியின் தலைமைத்துவம் அளித்த வாக்குறுதியின் படி நிச்சயமாக நிறைவேற்றப்படும். எமது கட்சிக்குக் கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. மற்றைய ஒன்றையும் கூடிய விரைவில் வழங்குவதற்கு தீர்வு எட்டப்படும்.
தலைமைத்துவம் கடந்த தேர்தல் காலத்தின்போது, அளித்த வாக்குறுதியின் படி அம்பாறை மாவட்டத்துக்கு அந்த தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவத்தை சுழற்சி முறையில் வழங்குவது பொருத்தமானதாக இருக்குமென்று எண்ணுகின்றேன்' என்றார்.
'மேலும், சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சிமன்றக் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும். அதற்கான வர்த்தமானி அறிவித்தல் மேற்கொள்வதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இப்பிரதேசத்துக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் அமைப்பது தொடர்பில் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன' எனவும் அவர் கூறினார்.
8 minute ago
16 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago
28 minute ago