Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பி.எம்.எம்.ஏ.காதர்
கல்முனை உவெஸ்லி உயர் தரப் பாடசாலையில் நான் கற்கின்ற போதுதான் நல்ல பண்புகளையும் நல்ல ஒழுக்கத்தையும் பணிவுகளையும் கற்றுக்கொண்டேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.எ.றஸாக் தெரிவித்தர்.
மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா திங்கட்கிழமை(08) அதிபர் எம்.எம்.ஹிர்பகான் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றி போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
கல்முனையில் சிறந்த பாடசாலையாக ஸாஹிரா கல்லூரி இருந்த போதிலும், நான் கல்முனை உவெஸ்லி உயர்தர தமிழ் பாடசாலையில்தான் கல்வி கற்றேன். அங்கு மாணவத்தலைவராகவும் இருந்திருக்கின்றேன்..
மாணவத் தலைவர்கள்தான் பாடசாலை சமூகத்தில் முன்மாதிரியானவர்கள். அவர்கள் எதை விதைக்கின்றார்களோ அதைத்தான் அறுவடை செய்வார்கள். மாணவப் பருவத்தைத் தாண்டி திருமணம் முடித்து குடும்ப வாழ்வில் நுழைந்த பின் நீங்கள் மரணிக்கும் வரை நீங்கள் விதைத்ததை அறுவடை செய்ய வேண்டியிருக்கும். இதில் யாரும் விதிவிலக்கல்ல என்பதை யாரும் மறந்து விட முடியாது.
மறைந்த மாமனிதர் மர்ஹூம் அஷ்ரபை எதனாலும் விலைகொடுத்து வாங்கிவிட,அடைந்து விட முடியாது. ஆனால் நல்ல பண்பினால்,பணிவினால் அவரை வென்று விட முடியும். அப்படி நல்ல பண்பினால் வெல்லப்பட்ட ஒருவர்தான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கின்ற ரவூப் ஹக்கீம்.
ஒரு மாணவன் தன்னை மாணவனாகக் காட்டிக் கொள்ளவே ஆசைப்படுகின்றான். அதற்கு வழிவிட வேண்டும் மாணவர்களிடம் தைரியமும் துணிவும் இருக்க வேண்டும். எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்தக் கொள்ள வேண்டும்.
ஆகவே, மாணவர்கள் நல்ல பழக்க வழக்கங்களையும் நல்ல பண்புகளையும் வளர்த்துக் கொண்டு நல்ல விடயங்களை விதைத்து எதிர்காலத்தில் நல்லவற்றை அறுவடை செய்ய முன்வர வேண்டும் என்றார்.
39 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago