Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 செப்டெம்பர் 07 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தின் தரம் அதிகரிக்கப்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஐ.எம்.அமீர் தெரிவித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான மாவட்ட விளையாட்டுப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வில் சிறப்புரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
ஒரு மனிதனுடைய வளர்ச்சியானது மூன்று வியடங்களில் தங்கியிருக்கிறது.ஆத்மீக ரீதியிலான நெறிகளில் தன்னை முன்னேற்றுதல்,உளவியல் வளர்ச்சியில் பக்குவத்தைப் பேணுதல்,உடற்பயிற்சிகள் மற்றும் இவ்வாறான விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து உடல் ஆரோக்கியத்தைப் பேணுதல் இவை மூன்றும் ஒரு மனிதனில் அமையும் போதே அம்மனிதர் முன்னேற்றம் அடைவார்.
விளையாட்டுகள் மூலம் விளையாட்டு வீரர்களுக்கு உடல் ஆரோக்கியம் மட்டுமன்றி சகிப்புத் தன்மை,வெற்றி தோல்விகளைப் பொருந்திக் கொள்ளும் தன்மை, இனங்களுக்கிடையிலான பரஸ்பர ஒற்றுமை உட்பட்ட ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.
இந்தப் பிராந்தியத்தில் இருக்கின்ற ஒரே ஒரு 400 மீற்றர் ஒடு பாதையைக் கொண்ட மைதானமென்றால் அது இந்த அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானம் தான்.ஆதலால் இதன் தரம் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும். இதற்காக பொறுப்பு வாய்ந்தவர்கள் எல்லோரும் பாடுபட வேண்டும்.இதற்காக எனது ஒத்துழைப்பை வழங்க நான் தயாராகவே இருக்கின்றேன் என்றார்.
13 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago