Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Princiya Dixci / 2016 ஜனவரி 30 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
அம்பாறை, இறக்காமம் பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய நிர்மானப் பணிகளுக்காக 18 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரின் இணைப்புச் செயலாளரும் இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமாகிய எம்.எஸ்.ஜெமில் காரியப்பர், நேற்று வெள்ளிக்கிழமை (29) தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீருக்கும் எனக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (29) மாலை திருகோணமலை சுகாதார அமைச்சில் இடம்பெற்றபோது இறக்காமம் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பான பல விடயங்களை சுட்டிக்காட்டினேன்.
அதில், கடந்த பல ஆண்டுகாலமாக இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் இயங்கிவந்த பிரதேச வைத்திய சுகாதார அதிகாரி காரியாலயத்துக்கு ஒரு நிரந்தரமான கட்டடம் இல்லாத நீண்டநாள் குறையையும் பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற வைத்தியர்கள் தங்குவதற்கான விடுதி வசதிகள் இல்லை என்பதையும், பற்சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான உபகரணங்கள் போதியளவு இல்லாத போன்ற குறைகளையும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரிடம் சுட்டிக்காட்டியதையடுத்தே இந்த நிதி ஒதுக்கீடுகள் சுகாதார அமைச்சரினால் கிடைக்கப்பெற்றுள்ளது.
சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய நிர்மானப் பணிக்காக ரூபாய் 10 மில்லியனும், வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களின் விடுதி அமைப்புக்காக ரூபாய் 05 மில்லியனும், பற்சிகிச்சை உபகரணங்கள் கொள்வனவுக்காக ரூபாய் 03 மில்லியனும் கிடைக்கப்பெற்றுள்ளது.
அத்துடன், இறக்காமம் பிரதேச வைத்தியசாலைக்கு நீண்டநாள் குறையாக இருக்கின்ற பெண் தாதியர் இல்லாத குறையையும் சுகாதார அமைச்சரிடம் சுட்டிக்காட்டியதையடுத்து இக்குறையையும் மிக விரைவில் நிவர்த்தி செய்து தருவதாகவும் வாக்குறுதியளித்துள்ளார் என்று மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
2 hours ago